30,000 மக்களை கடலில் வீசிய விமானம்: ஆர்ஜென்டினாவிடம் மீண்டும் கையளிப்பு
ஆர்ஜென்டினாவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 30000 பேரை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து மீண்டும் ஆர்ஜென்டினாவுற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை ஆர்ஜென்டினாவில் இராணுவ ஆட்சி நடைபெற்றிருந்தது.
இந்த காலப்பகுதியில் ஆர்ஜென்டினாவில் இராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, விமானத்தின் மூலம் உயிருடன் கடலில் வீசி கொல்லப்பட்ட கொடூரம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
மீண்டும் கொண்டுவரப்பட்ட விமானம்
குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ''கொலைகார விமானம்” என அழைக்கப்படும் Skyvan PA-51 என்ற விமானம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஆர்ஜென்டினாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் புயனோஸ் ஐரெஸில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த விமானம் வைக்கப்படவுள்ளது.
1976ஆம் ஆண்டு அதிபர் இசபெல் பெரோனின் ஆட்சி காலத்தில் ஆர்ஜன்டீனாவில் நடுநிலை என்று சொல்லப்படும் 'பெரோனிஸ்டு' (மித வலதுசாரி) கட்சியின் ஆட்சிமுறையும் , கம்யூனிஸ்ட்கள் எனப்படும் இடதுசாரிகளின் ஆட்சி முறையும் காணப்பட்டுள்ளது.
1976ஆம் ஆண்டு பெரோனிஸ்டு கட்சியின் தலைவராகவும் ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதியாகவும் இசபெல் பெரோன் எனும் பெண்மணி ஆட்சி செய்துள்ளார்.
ஆப்ரேஷன் காண்டோர்
இதன் போது அமெரிக்காவின் உதவியுடன் ஆர்ஜென்டினா இராணுவம் இசபெல் பெரோனிற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய தென் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரிகளை அழிக்க அமெரிக்கா ஒரு விரிவான திட்டம் தீட்டியுள்ளது. இதற்கு அமெரிக்கா இட்ட பெயர் 'ஆப்ரேஷன் காண்டோர்'.
இப்படியாக ஆர்ஜென்டினா இராணுவத்தை தூண்டி விட்டு இராணுவ ஆட்சியை அமெரிக்க உருவாக்கியுள்ளது. இதற்கு எதிராக ஒட்டுமொத்த ஆர்ஜென்டின மக்களும் போராட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளனர்.
இறுதியாக 1983ஆண்டு இராணுவ ஆட்சி அந்நாட்டில் முடிவுக்கு வந்துள்ளது. அதன் பின்னர் அந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கணக்கெடுப்பின் போதே 30,000லிருந்து 60,000 பேரை இராணுவம் கொலை செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
வரலாற்றை மாற்ற முடியாது
இவர்களின் பெரும்பாலானோர் ஆர்ஜென்டினாவின் ரியோ டிலா பிளாட்டா ஆற்றிலும், அட்லாண்டிக் பெருங்கடலிலும் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிலர் விமானங்களில் ஏற்றப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு அங்கிருந்து தூக்கி வீசப்படுவார்கள் என அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த படுகொலையில் தங்கள் உறவினர்களை இழந்தவர்கள், Skyvan PA-51 விமானத்தை மீண்டும் சொந்த நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து ஆர்ஜென்டினா அரசால் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டின் நிதியமைச்சர் செர்ஜியோ மாஸா, "வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
