கிண்ணியா கடற்கரைப் பூங்காவில் கடலலையில் பாதிப்புக்குள்ளான மற்றுமோர் பகுதி
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கிண்ணியா பூங்காவின் அடுத்த பகுதியையும் கடலலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்தப் பூங்காவில் இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு விழுந்ததனால், பூங்காவின் ஒரு பகுதியை கடல் அலை அடித்துச் சென்றிருந்தது.
பொதுமக்களின் கோரிக்கை
அந்த நேரத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரும், வெளிவவிகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவும் நேரில் வந்து இந்த பூங்காவை பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது, எதிர்காலத்தில் இந்தப் பூங்காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆனாலும் அதற்கிடையில், நேற்று (19) இன்னும் ஒரு பெரிய மரமும் வேரோடு விழுந்து, பூங்காவின் அடுத்த பகுதியும் கடலுக்கு இரையாகியுள்ளது.
இந்த நிலையில், பூங்காவின் எஞ்சியுள்ள பகுதி அவசரமாக பாதுகாக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், இன்னும் ஒரு வெள்ளம் ஏற்படுகின்ற போது, பூங்காவை முழுமையாக இழக்க வேண்டி ஏற்படும். எனவே, பூங்காவை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
