யாழ்ப்பாணம் என்.பி.பியின் வெற்றிலை பெட்டியல்ல..! சபையில் அர்ச்சுனாவின் நையாண்டி பேச்சு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் போக்குவரத்து மற்றும் துறைமுக விவகாரங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதன்போது இராமநாதன் அர்ச்சுனா, யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
இதனை தொடர்ந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, தான் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என அர்ச்சுனா தெரிவித்தார்.
அத்துடன், "சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியன் தான். யாழ்ப்பாணம் என்பது என்பிபியின் வெற்றிலை பெட்டியில்லை.
நான் கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதில் கூட ஒழுங்காக வரவில்லை. வடக்கு மக்கள் காணிக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை சரி முன்னெடுக்கப்பட்டுள்ளதா என கூறுங்கள் பார்ப்போம்” என கேள்வி எழுப்பினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
