தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு வைத்தியர் விவகாரம்.. நீதிமன்றிலிருந்து அர்ச்சுனாவுக்கு அழைப்பு
தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு வைத்தியரை அவதூறுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், அவதூறுகளைப் பரப்பும் நோக்கிலும் செய்திகளையும், பரப்புரைகளையும் மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலே தெல்லிப்பழைப் புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இன்னும் சில தரப்புகளுக்கும் எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
வழக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், தனியார் ஊடகம், வலையொளி தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவான் உசைன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முதலாம் தரப்பான வைத்தியர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையான போதும் இரண்டாம் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் எவரும் முன்னிலையாகாத நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் முதலாம் தரப்பு வைத்தியர் மற்றும் இரண்டாம் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரை சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆகியோர் முன்னிலையாகினர்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam