அர்ச்சுனாவின் ஐரோப்பிய பயணத்தில் கிடைத்த அதி முக்கிய ஆவணங்கள்! சிஐடிக்கு அழைக்குமாறு கோரிக்கை
பரிசோதனையின்றி சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக தான் பொறுப்புடன் குறிப்பிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் கிடைத்த தகவல்கள்
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சமிந்த விஜேசிறி உரையாற்றும் போது, பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் 'அர்ச்சுனாவின் கொள்கலன்' என குறிப்பிட்டதாக ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது அதற்கு பதிலளிக்கும் வகையில் அர்ச்சுனா இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் ஐரோப்பாவுக்கு ஒரு மாதம் சுற்றுலா சென்றிருந்த போது, அங்கு எனக்கு அதி முக்கியமான ஆவணங்கள் கிடைக்கப் பெற்றன. பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தாக தெரியவருகிறது.

அதனால் பொறுப்புடன் கூறுகிறேன், அதில் ஆயுதங்களே இருந்தன. என்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அல்லது இன்டர் போலுக்காவது அழைத்து கேளுங்கள் நான் சொல்கிறேன்.
இந்த கொள்கலன்கள் அமைச்சர் பிமல் ரத்நாயகக் அமைச்சராக இருந்த போது விடுவிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.