பதவி விலகல் தொடர்பில் அர்ச்சுனா வெளியிட்ட முக்கிய தகவல்
அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தினால் தானே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திலிருந்து இன்றையதினம்(2) வெளியேறிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
“இவர்கள் என்னை பதவி விலக்குவதற்காக பெரிதாக யோசிக்க வேண்டிய அவசியமில்லை.
நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிப்பார்கள் என்றுதான் பலர் எதிர்பார்த்தனர்.
நான் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பேன்.
நான் நீதியின் காற்றை சுவாசிக்கின்றேன், தற்போது வீசும் காற்றில் நீதியின் வாசம் வீசுகின்றது” என குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...