தமிழீழ போராட்டத்தை விற்று அரசியல் செய்த இந்திய அரசியல்வாதிகள்:அர்ச்சுனா பகிரங்கம்
தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் தமிழீழ போராட்டத்தை விற்று தமிழ் நாட்டில் அரசியல் செய்தார்களே தவிர நமக்கு ஒன்றும் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது சமூக ஊடக வலைத்தளத்தில் நேரடி உரையாடல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நிலை
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "உங்கள் ஏற்பாட்டில் தமிழ் நாட்டில் இருந்து 10 ஆயிரம் இளைஞர்கள் இலங்கைக்கு வந்து போராட்டத்தில் மரணமடைந்திருந்தால் நாங்கள் இப்போ நம்பியிருப்போம் தமிழர்களுக்காக போராடுவீர்கள் என்று.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசித் தலைவர் இருக்கும் போதும் சரி வீர மரணம் அடைந்த பின்னரும் இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. தமிழ் நாட்டில் அரசியல் செய்வதற்கு நாங்களா உங்களுக்கு அவல் - பொரியல்.

உங்கள் அரசியலை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.எங்கள் நாட்டை நாம் பார்த்துக் கொள்கிறோம்.இவர்களுக்கு பின்னாலும் சிலர் திருகின்றனர்.
நிலத்தில் உலக்கையை வைத்து குத்தி கொண்டிருக்கின்றனர் அரிசி வரும் என்று.நிலத்தில் குத்தி அரசி வராது.ஆனால் எமது சிலரும் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan