'அரகலய' போராட்டத்தில் இறப்பதற்கும் தயாராக இருந்த பெரும் புள்ளி
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வார்த்தைக்கு கூட எதிராக செயற்பட முடியாது. என்னை இங்கே கொலை செய்தாலும் பராவாயில்லை என தெரிவித்ததாக முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார எழுதிய 'அரகலயே பலய' நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வார்த்தைக்கு கூட எதிராக செயற்பட முடியாது. என்னை இங்கே கொலை செய்தாலும் பராவாயில்லை.' அரகலய'போராட்டத்தின் போது எனது வீட்டை ஒரு இலட்சம் பேர் சூழ்ந்து கொண்டனர்.
'அரகலய' போராட்டத்தில் ஈடுபட்ட குழுவுடன் இணைந்து அரசமைக்குமாறு கூறினர்.நான் முடியாது என்றேன்.

போராட்டத்தின் நோக்கம்
சட்டத்துக்கு முரணாக எதுவும் செய்ய முடியாது. நீங்கள் என்னை இங்கு கொலை செய்தாலும் பராவில்லை. அதற்கும் நான் தயாராகவே இருந்தேன்.
'அரகலய'போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது ஏதோ ஒன்றுக்கு பின்னர் இடையில் வேறு எங்கோ போனது.கடைசியில் சிங்கள மேலாத்திக்கம் முடிந்து விட்டது என கூறி நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பது மற்றும் சபாநாயகரை கொலை செய்யும் வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் 225 பேரையும் கொல்ல வேண்டும் என்றனர்.இந்த நோக்கம் ஆரம்பத்தில் வந்திருந்தால் போராட்டம் வெற்றி அளித்திருக்காது என்றார்.
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam