முதலமைச்சர் விஜயின் முதன்மை செயலாளர்கள் சற்றுமுன்னர் நியமனம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் தனிச்செயலாளர் 1, 2 ஆகிய இரு பதவிகளுக்கான அதிகாரிகள் சற்றுமுன்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனிச்செயலாளர் 1 அல்லது முதன்மை செயலாளராக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து முதல்வரின் தனிச் செயலாளர் 2 ஆக ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்
இணைச்செயலாளரும் நியமனம்
முதல்வரின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இந்த 2 தனிச் செயலாளர்களுடன் ஒரு இணைச் செயலாளரும் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் பதவியேற்றதில் இருந்து ஓராண்டு பதவியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக பதவியேற்ற விஜய், நேரு ஸ்டேடியத்தில் இருந்து நேராக தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள நிலையில் நியமனங்களை வழங்கியுள்ளார்.
