ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனம்
ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிலையில், நிறுவனத்துக்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய நியமனங்கள்
இதன்படி ஏ.கே.டி.டி.டி.அரந்தரா தலைவராகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக கலாநிதி கே.ஏ.எஸ்.கீரகல, சட்டத்தரணி தினேஸ் விதானபத்திரன, பேராசிரியர் கே.எம்.லியனகே,டி.எம்.ஐ.எஸ்.தசநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திறைசேரி பிரதிநிதியாக சதுர மொஹொட்டிகெதர நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனப்பங்குகளை விற்பனை செய்வதற்காக கோரப்பட்ட கேள்விப்பத்திர விண்ணப்ப அடிப்படையில் இந்திய, சீன தனியார் நிறுவனங்கள் உட்பட்ட மூன்று நிறுவனங்கள் தமது விலைக்கோரல்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 16 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம் News Lankasri

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri
