பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு யாழ்.மாவட்டத்தில் இணைப்பாளர்கள் நியமனம்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும், மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடைபவனியாகவும்,ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று ஆரம்பமான இந்தக் கூட்டம் சுமார் 03 மணி நேரம் இடம்பெற்றுள்ளது.
இதில் வடக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு - கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் நாளை மறுதினம் 3 ம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த போராட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துவதற்கு அறிக்கை வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
