புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: இறுதித் தீர்மானம் குறித்து வெளியான தகவல்
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பரிந்துரை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று(31.01.2026) இது தொடர்பில் கூடி, இறுதி முடிவெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தற்போது தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் ஐந்தாவது முறையாக ஒருவரது பெயர் அரசியலமைப்பு சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இறுதித் தீர்மானம்
பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்தப் பரிந்துரையை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுவதால் தீர்மான ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(31) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது குறித்துக் கூறுகையில்,
"கணக்காய்வாளர் நாயகம் பதவி தொடர்பாக அரசியலமைப்பு சபை கூடி கலந்துரையாடியது. ஜனாதிபதி புதிய பெயர் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை முறையாக ஆய்வு செய்ய உறுப்பினர்களுக்குச் சற்றே கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே, பாராளுமன்றம் கூடும் நாளான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3-ம் திகதி இது குறித்த இறுதி முடிவை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan