நிமல் இலஞ்சம் பெற முயன்றதாக குற்றச்சாட்டு! மூவரடங்கிய விசாரணைக்குழு நியமனம்
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க மூவரடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சராக இருந்த நிமல் சிறிபால டி சில்வா, ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து இலஞ்சம் பெற முயன்றதாக பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்ததது.
சுயாதீன விசாரணை நடத்த கோரிக்கை
இதனையடுத்து அவர் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்து சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

நிமல் சிறிபால டி சில்வா இலஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு! ஜப்பானிய நிறுவனம் மறுப்பு |
அதன் பிரகாரம் தற்போதைக்கு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரோஜினி குசலா வீரவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த குழுவில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, ஓய்வுபெற்ற நிர்வாக சேவை உத்தியோகத்தர் எஸ்.ம்.பி.கே. ஹேரத் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்