வவுனியாவில் பட்டதாரி பயிலுனர்களிற்கு நியமனம் வழங்கி வைப்பு
பட்டதாரி பயிலுனர்களிற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் 50 ஆயிரம் பட்டதாரிகளிற்கு அரச நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 357 பட்டதாரிகள் பயிலுனர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த நேர்முகத்தேர்வில் பல்வேறு காரணங்களிற்காக நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் பலர் மேன்முறையீடு செய்திருந்த நிலையில் அவர்களில் வவுனியாவை சேர்ந்த மேலும் 38 பேர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் 30 பேருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதில் அதிதிகளாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் ந.கமலதாசன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கருணாநிதி ஆகியோர் பட்டதாரிகளிற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்திருந்தனர்.









சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
