வடமேல் ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்!
வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமேல் ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
අතිගරු ජනාධිපතිතුමා විසින් අද(09) දින නව වයඹ පළාත් ආණ්ඩුකාරවරයා වශයෙන් අද්මිරාල් ඔෆ් ද ෆ්ලීට් වසන්ත කුමාර් ජයදේව කරන්නාගොඩ මහතා පත්කරන ලදී.#lka
— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) December 9, 2021
இதேவேளை, வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக கொழும்பில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை அவலங்கள் அரங்கேற்றப்பட்ட உள்நாட்டுப் போரின் போது இலங்கை கடற்படைத் தளபதியாக செயற்பட்ட வசந்த கரன்னாகொடவின் நியமானது சர்வதேச ரீதியில் கரிசனைக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 பேரைக் கடத்தல், சித்திரவதை செய்தல், கப்பம் பெறுதல் மற்றும் கொலை செய்ய சதி செய்தமை தொடர்பாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து வசந்த கரன்னாகொட அண்மையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக இலங்கை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி....
வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி! - மனோ கணேசனும் எதிர்ப்பு
வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி! - சுமந்திரன் எம்.பி கடும் கண்டனம்
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan