தேசிய பட்டியலிலிருந்து ஒருவரை உடனடியாக பிரதமராக நியமியுங்கள்: ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்
நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையை உடனடியாக கட்டுப்படுத்த மரியாதையும், அரசியல் அனுபவமும் உள்ள புத்திஜீவி ஒருவரை தேசிய பட்டியலிலிருந்து உடனடியாக பிரதமராக நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு திருகோணமலை ஆனந்த தேரர் அவசர கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்ட போராட்டங்களை உரிய முறையில் கையாளாமல் அரசாங்கம் மேற்கொண்ட கேவலமான முயற்சியின் பயங்கரமான விளைவுகளை தற்போது அனைவரும் அனுபவித்து வருவதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் பொது மரியாதையும், அரசியல் அனுபவமும் உள்ள புத்திஜீவி ஒருவரை தேசிய பட்டியலிலிருந்து உடனடியாக பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| பாகுபாலி திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்ச |
மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமே காரணம் எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri