பாகுபலி திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை!(video)
இலங்கை முழுவதும் ராஜபக்சர்களுக்கு சொந்தமான சொத்துக்களை அழிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.
டி.ஏ. ராஜபக்ஷ சகோதரர்களான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் தந்தை ஆவார்.
கொழும்பில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிகின்றனர். இந்நிலையில் இன்று டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளியான பிரபல திரைப்படமான பாகுபலி-1இல் மக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி செய்த மன்னின் மிகப்பெரிய சிலையும் இவ்வாறான பாணியில் உடைக்கப்பட்டமை போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.