கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
இலங்கை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி விண்ணப்பதாரிகளில் இருந்து அவர்களது தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு பாடநெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி மற்றும் உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சகல தகவல்களும் http://www.dtet.gov.lk எனும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அத்துடன் விண்ணப்பப்படிவங்களை mis.dtet.gov.lk இவ்விணையத்தளத்தின் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய முறை
பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களை இணைய முறையில் விண்ணப்பிக்க முடியாவிட்டால் இவ்வறிவித்தலில் காணப்படும் ''மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு"" அமைவாக A4 அளவிலான தாளில் உரிய விண்ணப்பத்தை தயாரித்து, சரியான முறையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் 2024.12.15 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர், உரிய தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளருக்கு கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது உரிய கல்லூரியின் தொழில் வழிகாட்டல் பிரிவுக்கு வந்து ஒப்படைக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு - விண்ணப்ப படிவம் - https://ism.dtet.gov.lk/OnlineDTET/public/Application
- பாடநெறிகள் - http://dtet.gov.lk/en/course-details/
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam