மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரையில் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் மூன்றாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களை அதனைப் பெற்றுக் கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு நான்கு இடங்களில் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தினை உணர்த்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் ஊடாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு திறக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி ஒன்றுகூடுவதைத் தவிர்த்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
முதலிரண்டு தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்வதில் காட்டிய ஆர்வத்தினை பொதுமக்கள்
மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் காட்டவில்லையெனவும் மூன்றாவது
தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர்
கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam