கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து அதிக நிதி அறவிடப்படுவதாக முறையீடு
கிளிநொச்சி (Kilinochchi) விவசாயிகளிடமிருந்து பெரும்போக பயிர்ச்செய்கை கூட்ட தீர்மானத்திற்கு மாறாக குளப்பராமரிப்பு என்ற போர்வையில் அதிக நிதியை அறவிடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழான பெரும்போக பயிர்செய்கைக்கான கூட்டம் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாய்க்கால் பராமரிப்புக்காக ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாவும் கம விதானை வேதனமாக ஏக்கர் ஒன்றுக்கு 300 ரூபாவும் மாத்திரமே அறவிடுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
ஆனால், குறித்த தீர்மானத்தை மீறி குளபராமரிப்பு என்ற போர்வையில் பெருந்தொகை நிதி, கூட்டத் தீர்மானத்துக்கு மாறாக கமக்கார அமைப்புகள் விவசாயிகளிடமிருந்து அறவிடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதாவது, கடந்த சிறுபோக செய்கையின் போது குறித்த குள மதிப்புக்குரிய நிதி அறவிடுவது தொடர்பில் கூட்ட தீர்மானத்துக்கு அமைவாக நிதி அறவிடப்பட்டது. இருந்த போதிலும் பெரும் போகத்தில் இவ்வாறான நிதி அறவீடுகளுக்கு எந்த விதமான அனுமதிகளும் வழங்கப்படவில்லை.
ஆனால், அதனை மீறி தற்போது குறித்த நிதியறவிடப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட அரச அதிபர் பிரதி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியோருக்கு விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri