யாழில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்ட வாகனம் தீக்கிரை
யாழ்ப்பாணம் - மானிப்பாய் (Manipay) பகுதியில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (14.15.2024) இணுவில் வீதி (Inuvil ), மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன், வான் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல் நிலை
தனிப்பட்ட மோதல் நிலை காரணமாக தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனவும், உடுவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளபட்டிருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri