யாழில் முதன்முறையாக அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா

Sri Lankan Tamils Tamils Jaffna
By Theepan Oct 21, 2023 08:19 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக இம்முறை நடத்தப்படவுள்ள அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு டவர் மண்டபத்தின் தமிழ் பிரிவுப் பொறுப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நாடக திருவிழா யாழ். வலிகாமம் வலயத்திற்கு உட்பட்ட யூனியன் கல்லூரியில் எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (20.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித

டவர் மண்டப அரங்க மன்றம்

அவர் மேலும் தெரிவிக்கையில், கலைத்துறையின் மேம்பாட்டிற்காகவும் கலைஞர்களின் கௌரவத்திற்காகவுமே டவர் மண்டப அரங்க மன்றம் செயற்பட்டு வருகின்றது.

யாழில் முதன்முறையாக அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா | Apeksha Tamil Drama Festival First Time In Jaffna

கொழும்பில் எல்பிஸ்டன் மற்றும் டவர் அரங்கில் வருடந்தோறும் நடைபெறுகிற நாடக திருவிழாவை டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த உள்ளோம்.

இங்குள்ள பாடசாலை மாணவர்களின் நாடகத் திறமைகளையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காகவும் அபேக்‌ஷா யாழ். தமிழ் நாடகத் திருவிழா எனும் தொனிப்பொருளில் முதற்தடவையாக இவ் நாடக விழா இம்மாதம் 25, 26, 27 ஆகிய மூன்று தினங்களில் காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை யாழ். யூனியன் கல்லூரியில் நடைபெற இருக்கின்றது.

காசாவில் நடந்ததுதான் புதுக்குடியிருப்பிலும் நடந்தது! இரட்டை வேடம் போடாதீர்கள் : சபையில் சுமந்திரன் காட்டம்

காசாவில் நடந்ததுதான் புதுக்குடியிருப்பிலும் நடந்தது! இரட்டை வேடம் போடாதீர்கள் : சபையில் சுமந்திரன் காட்டம்

அனைவருக்கும் அழைப்பு

இதில் யாழ்ப்பாணத்திலுள்ள கல்வி வலயங்களில் நாடகமும் அரங்கியல்துறை ஆசிரிய ஆலோசகர்களையும், இப்பாடத்தினை கற்பிக்கின்ற ஆசிரியர்களையும், உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினைக் கற்கும் மாணவர்களை் உட்பட துறைசார்ந்த அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

யாழில் முதன்முறையாக அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா | Apeksha Tamil Drama Festival First Time In Jaffna

இங்கு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நாடகத் திருவிழாவில் டவர் மண்டப அரங்க மன்ற பாடசாலை மாணவர்களின் நாடகங்களும் வலிகாமம் பிரதேசத்தை முதன்மைப்படுத்துகின்ற நாடக ஆசிரியர்களினது நாடகங்கள் உட்பட நாடக ஆளுமைகள் பலரதும் பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட இருக்கின்றது.

இங்குள்ளவர்ளிற்காகவே டவர் மண்டப அரங்க மன்றம் தமிழ் மொழி மூலமான நாடக விழாவை முதற் தடவையாக யாழில் நடத்துகிற போது அதற்கு அனைவரும் ஆதரவை வழங்கி நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிற்கான புதிய தொடருந்து நேர அட்டவணை நடைமுறைக்கு

வடக்கிற்கான புதிய தொடருந்து நேர அட்டவணை நடைமுறைக்கு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US