காசாவில் நடந்ததுதான் புதுக்குடியிருப்பிலும் நடந்தது! இரட்டை வேடம் போடாதீர்கள் : சபையில் சுமந்திரன் காட்டம்

M A Sumanthiran Maithripala Sirisena Sri Lanka Sri Lanka Final War Israel-Hamas War
By Rakesh Oct 21, 2023 08:24 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாள்களுக்கு முன்னர் காசா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று இந்தச் சபையில் உரையாற்றினார்.

நானும் கூட அதைக் கண்டித்தேன். ஆனால், காசா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சைக் கண்டித்த மைத்திரிபால சிறிசேன, புதுக்குடியிருப்பில் வைத்தியசாலை குண்டு வீசித் தாக்கப்பட்ட போது அச்சமயத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்.

இதுவரை அதைக் கண்டிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நாடாளுமன்றத்தில் நடக்கின்ற இந்த விவாதத்திலேயே இந்தப் பாசாங்கு நடிப்புத்தனத்தை - அதன் உச்சத்தை - எங்களால் காண முடிகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித

நாடாளுமன்றத்தில் நேற்று (20.10.2023) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல், பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

உலகின் மனச்சாட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு விடயம் பற்றி நான் இப்போது பேசுகின்றேன். இங்கு நான் பேசிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் கூட, மிக மோசமான வன்முறைகள், பேரழிவுகள், கண்மூடித்தனமான படுகொலைகள் ஆகியவற்றைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்துக்கான எங்கள் ஆதரவை வெளிப்படுத்தி நான் இந்த உரையைத் தொடங்குகின்றேன்.

இது இரட்டை வேடம்! இரட்டை நாக்கு போக்கு

அளவற்ற மனிதாபிமானப் பேரழிவு மிக மோசமாக ஏற்பட்டிருப்பது பற்றிய படங்கள், செய்திகளை நாம் நேரடியாக அவதானிக்கும் இந்நிலையில், நாங்கள் சிறிய நாடாக இருந்தாலும் அது தொடர்பில் நாம் அமைதியாகப் பார்த்திருக்க முடியாது. துயரதில் - துன்பத்தில் - மூழ்கியிருக்கும் அந்த மக்களுக்காக நாங்கள் கட்டாயம் குரல் எழுப்ப வேண்டும்.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான அரசியல் பிரச்சினை கடும் சிக்கலானது. அது எங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த அரசியல் பிரச்சினை தொடர்பாக இருதரப்பு நியாயங்களையோ அவர்களுடைய வாதங்கள் பற்றியோ நான் இங்கு எதுவும் பேசப் போவதில்லை.

இது அதற்கான நேரமும் அல்ல. ஆனால், வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டிக்கவும், யுத்தத்தை மக்கள் மீது ஏவி விட்டுப் பேரழிவைத் தூண்டுவோரை அதை நிறுத்துமாறும், வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறு நாங்கள் வற்புறுத்த வேண்டிய வேளை இது.

காசாவில் நடந்ததுதான் புதுக்குடியிருப்பிலும் நடந்தது! இரட்டை வேடம் போடாதீர்கள் : சபையில் சுமந்திரன் காட்டம் | Israel Vs Palestine War And Sri Lanka Sivil War

நீண்ட காலம் வன்முறைகள் திணிக்கப்பட்டமையால் தொடர்ந்து பேரழிவுகளையும் துன்பங்களையும் சந்தித்த ஒரு மக்கள் கூட்டத்தின் சார்பில் நான் இங்கு உரையாற்றுகின்றேன். வன்முறைகள் இழைக்கப்படும் போது அதை யார் செய்தார்கள் என்பது முதலில் முக்கிய விடயம் அல்ல.

அத்தகைய நாசவேலை செய்கின்ற சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட வேண்டும். ஆனால், நான் இங்கு வலியுறுத்துவது முதலில் மக்களின் நெருக்கடிகள், சிக்கல்கள், துன்பங்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும், விரைந்து கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான். அந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தச் செய்ய வேண்டும். மக்கள் கூட்டத்தினர் அல்லது நாடுகள் தங்களுடைய வேறுபாடுகளை - முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள வன்முறையை நாடுகின்ற முறையில் செயற்படுவார்களானால் நாங்கள் ஒரு நாகரிக உலகத்தில் வாழ்பவர்கள் என்று எப்படிக் கூற முடியும்? அப்படிப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கக் கூடும். இப்போதல்ல. பிணக்குகள், முரண்பாடுகள் எவ்வளவு தீவிரமாக - மோசமாக - இருந்தாலும் அவை பேச்சு மூலம், இடை ஏற்பாட்டாளர்கள் மூலம், சமரச முயற்சிகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

வன்முறை மூலமோ, ஒருவரை ஒருவர் கொல்வதன் மூலமோ அல்ல. ஆனால், நாங்கள் பார்க்கும் உலகில் நிலைமை அப்படியல்ல. தொடர்ந்து வன்முறைகள் நீடிக்கின்றன. பல நாடுகளில் இத்தகைய வன்முறைகளும் யுத்தங்களும் தொடர்கின்றன. அதை நாங்கள் பார்க்கின்றோம். உக்ரைன் யுத்தம் பார்த்தோம். இப்போது மத்திய கிழக்கில் பார்க்கின்றோம்.

மகிந்தவின் அலுவலகத்திற்குள் அமானுஷ்ய சக்திகள்: ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

மகிந்தவின் அலுவலகத்திற்குள் அமானுஷ்ய சக்திகள்: ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

மத்திய கிழக்கில் இப்போது கட்டவிழும் விடயங்கள், 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமார் மூன்று தசாப்த காலம் எங்கள் மீது கட்டவிழ்ந்த விடயங்களோடு எவ்வளவு தூரம் ஒன்றுபட்டவையாக - ஒரே மாதிரியாக - இருக்கின்றன என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனக்கு முன்னர் இங்கு பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாள்களுக்கு முன்னர் காசா ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து உரையாற்றினார். நானும் கூட அதைக் கண்டித்தேன்.

யார் அதற்குப் பொறுப்பு என்பதற்கு அப்பால், அதைக் கடந்து நாங்கள் கண்டித்தோம். அந்த வைத்தியசாலை தாக்கப்பட்ட போது ஒரு முக்கிய விடயம் இடம்பெற்றது. அந்த வைத்தியசாலை மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேலினுடைய உத்தியோகபூர்வ பிரதிபலிப்பு உடனடியாக அமைந்தது.

அத்தோடு பயங்கரவாதிகள் அங்கிருந்து தாக்குகின்றார்கள் என்றும் கூறப்பட்டது. இப்போது வேறு விதமான கருத்துக்களும் வெளிப்படுகின்றன. அந்தக் குண்டு வீச்சு இஸ்ரேலால் நடத்தப்படாமல் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், எங்களுக்கு எதுவும் தெரியாது.

யார் செய்தார்கள் என்பது முக்கியமல்ல. நான் இங்கு குறிப்பிட வருவது வேறு ஒரு விவகாரம். அத்தகைய சம்பவம் நடந்த கையோடு இஸ்ரேல் அரச கட்டமைப்பு அது மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்டது என்ற விளக்கத்தை விழுந்தடித்துக் கொண்டு தரத் தயாராக இருந்தது.

இவ்விடத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்ன நடந்தது என்பதை மறைத்து நாங்கள் தப்பி விட முடியாது. அதைத்தான் (இஸ்ரேல் அரசு இப்போது கூறியதைத்தான்) இங்கும் இந்த அரசும் கூறியது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டைக் கோரும் இலங்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டைக் கோரும் இலங்கை

மத்திய கிழக்கில் இரண்டொரு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சைக் கண்டித்த மைத்திரிபால சிறிசேன, புதுக்குடியிருப்பில் வைத்தியசாலை குண்டு வீசித் தாக்கப்பட்ட போது அச்சமயத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், இதுவரை அதைக் கண்டிக்கவில்லை.

இந்த நாடாளுமன்றத்தில் நடக்கின்ற இந்த விவாதத்திலேயே இந்தப் பாசாங்கு நடிப்புத்தனத்தை - அதன் உச்சத்தை - எங்களால் காண முடிகின்றது. மத்திய கிழக்கில் இரண்டு தேசங்கள் என்ற தீர்வைப் பற்றி இங்கு - இந்த நாடாளுமன்றத்தில் - பலரும் பேசுகின்றார்கள்.

ஆனால் இங்கு - இந்த நாட்டில் - அவர்களுக்கு அந்த விடயம் வெறுக்கப்பட்ட விவகாரமாக இருக்கின்றது. இங்கு அடுத்தடுத்து, வரிசையாகப் பேசிய ஒவ்வொருவரும் ஐ.நா. பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். இவ்விடயத்தில் ஐ.நா. தீர்மானங்கள் பற்றி வலியுறுத்துகிறார்கள்.

ஆனால், இங்கு - இந்த நாட்டில் - ஐ.நா. வரக்கூடாது, ஐ.நா. பங்களிப்புக்கு எதுவும் இல்லை, அதற்கு இடமில்லை என்று கூறுகின்றார்கள். ஐ.நா. தள்ளி நீக்க வேண்டும் என்று சத்தமிடுகின்றார்கள். இந்த விவாதத்தையொட்டி அரச பயங்கரவாதம் குறித்து கடுமையான கண்டனங்கள் இங்கு கூறப்படுகின்றன.

நானும் எனது குரலை அவர்களோடு சேர்ந்து கண்டனத்துக்காக ஒலிக்கின்றேன். ஆம். அது அரச பயங்கரவாதம்தான். அப்படியானால் இங்கு என்ன நடந்தது? இங்கும் அதுதானே - அரச பயங்கரவாதம்தானே - நடைபெற்றது. அதுதான் இங்குள்ள பாசாங்குத்தனம். இரட்டை வேடப் போக்கு.

மக்கள் மீது - மக்கள் கூட்டத்தின் மீது - பெரும் எடுப்பில் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துபவர்களைக் கண்டிக்க வேண்டும். நான் முழுமையாகக் கண்டிக்கின்றேன்.

அது ஹமாஸாக இருந்தாலும், இஸ்ரேல் நாடாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு நாடாக, ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாக இருந்தாலும் மக்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கு உங்களுக்கு - யாருக்கும் - உரிமை கிடையாது.

உங்களுக்கு யாரும் அத்தகைய உரிமையைத் தரவில்லை. அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கான ஆயுதங்கள் உங்களிடம் இருக்கின்றன என்பதற்காக, நீங்கள் ஓர் அரசு என்பதற்காக, நீங்கள் அதற்கான ஆயுதங்களை சுவீகரிக்க முடியும் என்பதற்காக, ஏனைய நாடுகள் உங்களை பாதுகாக்கின்றன என்பதற்காக, எந்த நாடும் அல்லது எந்த நாடு அல்லாத ஒரு கட்டமைப்பும் கூட, இவ்வாறு மக்களைக் கொன்றொழிப்பதற்கு எந்த உரித்தும் கிடையாது. இங்குதான் உங்களின் பாசாங்குத்தனம் - இரட்டை வேடம் - அம்பலப்படுத்தப்படுகின்றது.

உங்கள் சொந்த நாட்டில் நடந்ததை மன்னிப்பது போல் அனுமதித்துக் கொண்டு, கண்டிக்காமல் இருந்தபடி, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கும் இது போன்ற விடயத்தை நீங்கள் கண்டிப்பது வேடிக்கையானது.

புத்தளத்தில் காணாமல்போன மாணவர்கள் இருவரும் மீட்பு

புத்தளத்தில் காணாமல்போன மாணவர்கள் இருவரும் மீட்பு

நீங்கள் அதை எவ்வாறு செய்ய முடியும்? அப்படி விடயங்கள் நடப்பதற்கு நீங்கள் அவற்றை அனுமதித்தீர்கள். இடமளித்தீர்கள். அவற்றை மெச்சி கௌரவப்படுத்தினீர்கள் கொண்டாடினீர்கள். அதிலிருந்து பெருமிதம் கொண்டீர்கள். அதை ஒரு சீரியஸான விடயமாக நீங்கள் கருதவில்லை. இது இரட்டை வேடம். இரட்டை நாக்கு போக்கு.

மக்களினுடைய துயரங்கள், கஷ்டங்கள் நீக்கப்பட வேண்டும். இஸ்ரேல் - பலஸ்தீனப் பிணக்கு ஓர் அரசியல் பிரச்சினை. அது அரசியல் ரீதியாகவே தீர்க்கப்பட வேண்டும். ஏனைய நாடுகளில் உள்ள இதுபோன்ற பல பிணக்குகளும் அவ்வாறுதான் தீர்க்கப்பட வேண்டும். அவை நாடுகளுக்கு இடையிலான - மக்கள் கூட்டங்களுக்கு இடையிலான - அரசியல் பிணக்குகள், முரண்பாடுகள். அவை அரசியல் ரீதியாகத்தான் தீர்க்கப்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள பிணக்கும் ஓர் அரசியல் பிரச்சினைதான். அது அதுவும் அரசியல் ரீதியாகத்தான் தீர்க்கப்பட வேண்டும். அரசியல் பிரச்சினைக்கு இராணுவம் தீர்வு இல்லை என்று அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கூறியமையை நாங்கள் செவிமடுத்தோம்.

இப்போது பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினையையொட்டி அவர் அதனைக் கூறுகின்றார். ஆனால், எங்கள் நாட்டில் ஓர் அரசியல் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை முன்வைத்து, யுத்தத்தை ஏவி விட்டு, அதைக் கொண்டு நடத்திய ஜனாதிபதி அவர்தான். ஆகவே, இவ்வளவுக்குமாக நாட்டை மட்டும் நான் தனித்துக் குற்றம் சுமத்த விரும்பவில்லை.

நாகரிக உலகில் வன்முறைக்கும் பேரழிவுகளுக்கும் இடமில்லை. வன்முறையை யார் முன்னெடுத்தாலும் அவர்கள் முழு அளவில் - வெளிப்படையாகவே - கண்டிக்கப்பட வேண்டியவர்கள். கண்டிக்கப்பட வேண்டும். இன்று நாங்கள் துன்ப, துயரங்களை - நெருக்கடிகளை - எதிர்கொண்டிருக்கும் மக்களோடு எங்கள் உணர்வுகளை ஒன்றுபடுத்தி அவர்களுக்காக ஆதரவு தெரிவிக்கின்றோம்.

குழந்தைகளை, சிறுவர்களைக் கொன்றழித்து, மக்களை பழிவாங்குகின்ற இத்தகைய வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. வன்முறையின் மோசமான விளைவுகளால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்காக நாங்கள் குரல் எழுப்புவோம்.

வன்முறை ஹமாஸால் முன்னெடுக்கப்பட்டாலும், இஸ்ரேல் நாட்டால் முன்னெடுக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் குரல் எழுப்புவோம். மத்திய கிழக்கிலும் முழு உலகிலும் அமைதி நிலவ - சமாதானம் ஏற்படப் பிரார்த்திப்போம் என குறிப்பிட்டார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US