கொழும்பில் புதிதாக உருவான நவீன அடுக்குமாடி குடியிருப்பு
கொழும்பு நகர்ப்புற மக்களுக்கு சிறந்த வீடமைப்பு வசதிகளை வழங்கி வைக்கும் நோக்கில், கொழும்பு 14, கிராண்ட்பாஸ், ஸ்டேடியம்கம பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'Port View Residencies' அடுக்குமாடி வீடமைப்புத் தொகுதி நேற்று மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகர்ப்புற வளர்ச்சி பிரதி அமைச்சர் இரங்க குணசேகர உள்ளிட்ட பல முக்கிய அழைப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
வீடமைப்புத் தொகுதி
இதன்போது தகுதிபெற்ற பயனாளிகளுக்கு உரிமப்பத்திரங்களும் வீடுகளுக்கான சாாவிகளும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சின் வளர்ச்சித் திட்டமிடலுக்கு அமைவாக, நகர்ப்புற வளர்ச்சி அதிகாரசபையின் வழிகாட்டலில் கொழும்பு நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்திற்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் மூலம் இந்த வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

9,866 மில்லியன் ரூபா மொத்தச் செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடன் உதவியின் கீழ் பெறப்பட்டுள்ளது. 15 மாடிகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் திட்டத்தில், தலா 500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 1,000 வீட்டு அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகள்
குடியிருப்பாளர்களின் அன்றாட மற்றும் பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதார மையம், சமூகக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம், பொலிஸ் சாவடி, கிராம நிலதாரி அலுவலகம், தீயணைப்புப் பிரிவு, சூப்பர் மார்க்கெட், சிறுவர் பூங்கா மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இது கட்டப்பட்டுள்ளது.
மேலும், சுற்றியுள்ள வீதிப் பின்னல் மற்றும் கால்வாய் அமைப்புகளை அபிவிருத்தி செய்தல், புதிய சமூகக் கூடத்தை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துதல் போன்ற விரிவான உள்கட்டமைப்புப் பணிகளும் இத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டம், நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவில் தடைப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
இங்குள்ள 1,000 வீடுகளில் 250 வீடுகளுக்கு நேற்று குடியிருப்பாளர்கள் குடியேற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 750 வீடுகளிலும் அடுத்த 8 மாதங்களுக்குள் கட்டம்படமாக மக்கள் குடியேற்றப்படுவர் என்றும் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்




Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri