அழுத்தங்களுக்காக ஆன்மீக ஆலோசனையை பெற பிருந்தாவனுக்கு சென்ற விராட்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தோல்வியின் பின்னர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள இந்திய கிரிக்கட் வீரர், விராட் கோஹ்லி, உத்தரபிரதேசில் அமைந்துள்ள பிருந்தாவனுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டமை தொடர்பான காணொளி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
2024-25 போர்டர்-கவாஸ்கர் தொடரின் முடிவைத் தொடர்ந்து, அவர்களின் குழந்தைகள் வாமிகா மற்றும் அகாய் ஆகியோருடன் விராட் கோஹ்லியும் அவருடைய மனைவியும் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் ஜி மகாராஜிடம் சென்றுள்ளனர்.
விராட் கோஹ்லி
இதன்போது, கடின உழைப்பு, அதிர்ஸ்டம் மற்றும் நம்பிக்கைகள் போன்ற கருப்பொருட்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
virat, anushka and the kids visited shri premanand maharaj ji ❤️🙏🏼🕉pic.twitter.com/ZC6GHuvVWa
— a. (@viratkohlix_18) January 10, 2025
விளையாட்டில் ஒரு தனிநபரின் செயல்திறன் ஒரு முழு நாட்டின் மனநிலையையும் விருப்பங்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை குரு இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், விளையாட்டு வீரர்களின் செயல்திறன் தேசிய மனநிலையை எவ்வாறு உயர்த்தலாம் அல்லது குறைக்கலாம் என்றும் அவர் இதன்போது ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த காணொளி, சவாலான காலங்களில் பலர் பெரும்பாலும் அமைதி மற்றும் வழிகாட்டுதலுக்காக ஆன்மீகத்திற்கு எவ்வாறு திரும்புகிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
ஆன்மீக ஆலோசனை
அத்துடன், விளையாட்டு போன்ற உயர் அழுத்தத் தொழில்களில் உள்ளவர்கள் உட்பட பலருக்கு ஆன்மீகம் எவ்வாறு வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது என்பதை இந்த காணொளி விளக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு புனித நகரமான பிருந்தாவனத்தில் இந்து கடவுளான கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்ததாகக் கூறப்படுகிறது.
இங்கு கிருஷ்ணருக்கும் ராதைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் பல உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |