நாடு திரும்பினார் அனுதி குணசேகர
இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர தற்போது நாடு திரும்பியுள்ளார்.
இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் கடந்த மே 31ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெற்றது.
அனுதி குணசேகர
உலகம் முழுவதிலிருந்தும் 108 அழகிகள் பங்கேற்ற இந்த மிகப்பெரிய போட்டியில், கடந்த சில நாட்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அனுதி, ஹெட்-டு-ஹெட் மற்றும் மல்டிமீடியா பிரிவுகளில் இறுதி சுற்றுகளுக்குத் தகுதி பெற்றதோடு, இந்தப் பிரிவுகளில் இலங்கை அழகிகள் இதற்கு முன் அடைந்திராத ஒரு சாதனையை அடைந்திருந்தார்.
எனினும், இறுதி 40 அழகிகள் பட்டியலில் அனுதிக்கு இடம் கிடைக்கவில்லை.
இலங்கையின் உலக அழகி
இதன் மூலம் இலங்கையின் உலக அழகி கனவு இந்த ஆண்டு நிறைவேறாமல் போனது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இந்தப் பிரிவுகளில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இலங்கைப் போட்டியாளராக அனுதி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam