கைது செய்வதில் தடுமாறும் அநுர
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பல கைது நடவடிக்கைகளுக்கு சீன தூதரகம் பெரும் தடையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது அநுர பதவியேற்ற உடன் முன்னெடுக்கவிருந்த பல கைது நடவடிக்கைகள் சீன தூதரகத்தின் உதவியுடன் நேற்று முன்தினம் தடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் அநுரவிற்கு ஆபத்தானவராக ரணில் விக்ரமசிங்க செயற்பட வாய்ப்புள்ளதாகவும், தற்போது தான் உண்மை முகத்தினை பொது மேடைகளில் காட்டும் பட்சத்தில் பின்னால் வரும் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் அமைதியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கு முன்பாக ஏகப்பட்ட கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற முன்னெடுப்புக்களும் இடம்பெறும் சாத்தியம் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகின்றது.
புதிய ஜனாதிபதியின் அடுத்தக்கட்ட நகர்வு மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (Nilamdeen) எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |