புதிய அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்: ஜோசப் ஸ்டாலின்
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் ஆரம்பம் நன்றாக உள்ளதுடன், அவை தவறினால் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் விசேட நேர்காணலில் கலந்துகொண்டு புதிய அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இந்த புதிய அரசாங்கம் மக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஆகும். எனவே புதிய அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை செயற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் அரசாங்கமாகவே காணப்பட்டது. ராஜபக்சர்கள் தங்களை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களில் அடக்குமுறையை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
எனவே புதிய அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam