சபாநாயகரின் செயற்பாடுகளை விமர்சித்த அனுரகுமார
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சரின் உரைக்கு பின்னர் உரையாற்ற ஆரம்பித்த அனுரகுமார திஸாநாயக்க, வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக தான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிப்பதை தவிர வேறு கதைகளை பேச நிதியமைச்சருக்கு சந்தர்ப்பமில்லை எனக் கூறியுள்ளார்.
இதன் போது விடயம் ஒன்றை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்த அனுரகுமார சபாநாயகரின் நடந்துக்கொள்ளும் விதத்தை விமர்சித்துள்ளார்.
நீங்கள் இப்படி நடந்துக்கொள்ள வேண்டாம். தலைமை நாற்காலியில் இருக்கும் உங்களது பணிகளை அவதானித்து வருகின்றோம்.
குறைந்தது குறுகீடுகளை நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு கேள்வியை கேட்டு அதனை விளக்கும் போது அதற்கு இடமளிக்க வேண்டும்.
இது உங்களது கடமை. நீங்கள் ஆளும் கட்சியின் அமைப்பாளர் அல்ல. நீங்கள் நாடாளுமன்றத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தலைமை நாற்காலியில் அமர்ந்துள்ள நபர். இதனை விடுத்து, நீங்கள் விசர் வேலைகளை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.





பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
