அனுரவின் கட்சி கூட்டத்தில் தாக்கப்பட்ட புலனாய்வு அதிகாரி
குருநாகல் - சத்தியவாதி விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் சிவில் உடையணிந்த புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுரகுமார திசாநாயக்கவை புகைப்படம் எடுப்பதற்காக நேற்று (2) நடைபெற்ற பேரணியில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே மக்கள் குழுவால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அதிகாரி புகைப்படம் எடுப்பதை தவிர்த்து நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பில் ஏறி தப்பிச் சென்றதாகத் கூறப்படுகிறது.
திசாநாயக்கவின் பாதுகாப்பு பிரிவு
இச்சம்பவம் குறித்து குருநாகல் தலைமையக பொலிஸ் பரிசோதகர் சன்ன கொப்பஹேர கூறுகையில்,
"சிவில் உடையில் புகைப்படம் எடுப்பது யார் என்று திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தெரியவில்லை.
இந்த சந்தேகத்தின் காரணமாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில், நாங்கள் அவரை விசாரித்தோம்.
பின்னர் அவர் ஒரு பொலிஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது.'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |