பெண் மருத்துவரையும் விட்டு வைக்காத முன்னாள் இராணுவம்! வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்
அநுராதபுரம்(Anuradhapura) போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் தவறான முறைக்குட்படுத்தப்பட்டுள்ளமையானது தற்போது இலங்கையில் பேசுபொருளாகியுள்ளது.
32 வயதான பெண் மருத்துவரான அவர் நேற்று முன்தினம்(10) அநுராதபுரம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான விடுதியில் கத்தி முனையில் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
சந்தேகநபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் ஒரு நாட்டில் மருத்துவருக்கே பாதிப்பில்லையா என்ற அச்சஉணர்வு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் குறித்து அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |