முன்னாள் இராணுவ வீரரிடம் பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்கள்: 72 மணித்தியாலங்களில் நடந்தது என்ன..!
கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர வைத்தியசாலையின் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட விடயம் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியிருந்தது.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், தற்போது மேலும் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
சம்பவத்தின் போது, சந்தேக நபர் பெண் மருத்துவரை பாலியல் அத்துமீறல்களுக்கு உட்படுத்தியதுடன் அவரின் கையடக்க தொலைபேசியையும் கைப்பற்றி சென்றிருந்தார்.
அத்துடன், சந்தேக நபர் வைத்தியரின் மிக மோசமான புகைப்படங்களை வைத்தியரின் கையடக்க தொலைபேசியிலேயே பதிவிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், வைத்தியரின் தொலைபேசியை அணுக சந்தேக நபர் எவ்வாறு கடவுச்சொல்லை பெற்றார் என்னும் கேள்வி எழுந்த நிலையில் பெண் வைத்தியரை மிரட்டி அவர் அதனை பெற்றுக்கொண்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சம்பவம் நடந்து சுமார் 72 மணித்தியாலங்களிற்கு பின்னரே குறித்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். எனவே, இந்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அவர் பெண் வைத்தியரின் மோசமான புகைப்படங்களை யாருக்கும் பகிர்ந்திருப்பாரோ என்னும் கேள்வியும் எழுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கலவையான விமர்சனங்கள்.. அவதார் 3 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? பாக்ஸ் ஆபிஸ் விவரம் Cineulagam