அனுரவுடன் விவாதத்திற்கு தயார்!...பகிரங்கமாக அறிவித்த சஜித் தரப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் (Anura Kumara Dissanayakke) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விவாதத்தில் ஈடுபடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, அனுர குமார திஸாநாயக்க, இந்த வாய்ப்பை ஏற்று விவாதத்திற்கான திகதியை நிர்ணயிக்கவேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் விவாதத்தை தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ளதாக, அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.

விரைவில் விவாதம்
இதன் அடிப்படையில், தற்போது சஜித் பிரேமதாச உடன்பட்டுள்ளமையால், விரைவில் விவாதம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan