இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அநுரவின் இரகசிய முடிவுகள்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதிலும் USAID விவகாரத்தில் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் இந்தியா பலமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடனும் சீனாவுடனான உறவை இலங்கை அதிகமாக பேணுவதாக பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அவர்,
“அநுரகுமார திசாநாயக்க(Anura Kmara Dissanayake) இந்தியாவை முற்றுமுழுதாக ஓரம் கட்டும் நிலைக்கு வந்துள்ளார்.
அண்மைய நாட்களில் இந்தியா இலங்கையில் எதிர் தரப்புகளிடம் தனது ஆர்வத்தை காட்டுகின்றது” என குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
