நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகள் ஜனாதிபதியால் அறிவிப்பு - பாராட்டும் பொருளாதார நிபுணர்கள்
சமகால அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தற்சமயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதில் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கென பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் திட்டங்கள் அழமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிதி ஒதுக்கீடு
ஒவ்வொரு பிரிவினரையும் இலக்கு வைத்து இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்டங்களை முன்வைத்து வரும் நிலையில், அது குறித்து பலரும் வரவேற்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த அரசாங்களின் தூர நோக்கற்ற சிந்தகைளில் இருந்து மாறுபட்டு, தேவையற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியம்
கல்வி, சுகாதாரம், விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் மாணவர் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழர் தாயக பகுதிகளிலுள்ள வளங்களையும் மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan