கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு வெளியான குரல்பதிவு!
புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகின் வலுவான நபராக கருதப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, தென்னிலங்கை வானொலி ஒன்றின் யூடியுப் தளத்தில் வெளியாகியுள்ள காணொளி பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
குறித்த யூடியுப் தளத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் காணப்பட்ட குரல்பதிவில், “கமாண்டோ ஷாலின் என்ற நபர் கொலையைத் திட்டமிட்டுச் செய்ததாகவும். கணேமுல்ல சஞ்சீவவை தீர்த்து கட்டிவிட்டோம்' என்றும் கூறப்பட்டுள்ளது.
வட்ஸ்அப் அழைப்பு
வட்ஸ்அப் அழைப்பு மூலம் வழங்கப்பட்ட இந்தத் தகவலின்படி, கணேமுல்ல சஞ்சீவைக் கொன்றது கமாண்டோ ஷாலின் என்ற நபர்தான் என உறுதிப்படுத்தியதாக அந்த காணொளி தகவல் வெளியிடப்பட்டது.
கணேமுல்ல சஞ்சீவவுடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஷாலின், வானொலியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நபர் ஒருவருடன் அறிமுகமானவர் என்பதையும் பதிவேற்றப்பட்ட குரல்பதிவு மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
இது தவிர, கணேமுலே சஞ்சீவவின் முக்கிய போட்டியாளராகக் கருதப்படும் கெஹல்பதாரா பத்மே என்ற நபர் குறித்த வானொலிக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட போது, “கணேமுலே சஞ்சீவவுக்கும் தனக்கும் இடையிலான மோதல் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தியாதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கலந்துரையாடலின் போது, 'என் தந்தையை அவர் கொன்றதால் நான் அவரைக் கொல்வேன். சஞ்சீவை கவனமாக இருக்க வேண்டும்” என்றும் கூறும் முகமாக அந்த பதிவு அமைந்திருந்தது.
முந்தைய திட்டமிடல்கள்
சஞ்சீவவுக்கு எதிரான கெஹல்பதாரா பத்மேவின் முந்தைய திட்டமிடல்கள் தீவிரமானவை என கருதப்படுகிறது.
மேலும் இந்த உரையின் குரல்பதிவும் குறித்த வானொலி நிகழ்ச்சியால் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் கெஹல்பதாரா பத்மே மற்றும் அவிஷ்கா ஆகியோர் இந்தக் கொலையைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாக நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
கணேமுலே சஞ்சீவ கொலை, பாதாள உலகம், பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை
ஊடக அறிக்கைகளின்படி, கணேமுல்ல சஞ்சீவவால் முன்னெடுக்கப்பட்ட 39 கொலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் வெளியிடப்படாத எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற உலகில் ஒரு சக்திவாய்ந்த நபர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொல்லப்பட்டது இலங்கையில் பொது பாதுகாப்பு தொடர்பில் கடுமையான பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்ந சம்பவத்துக்கு பிறகு குறித்த ஊடகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட ஆளும் தரப்பு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இவ்வாரு சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவுடன் கூடிய நிகழ்ச்சியின் காணொளியை இங்கு காணலாம் - link
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |