கணேமுல்ல சஞ்சீவவிற்கு அதியுச்ச பாதுகாப்பு! வெளிவரும் பல தகவல்கள்
பிரபல பாதாள உலகக் குழு தலைவரான சஞ்சீவகுமார சமரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (19) புதுக்கடை நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். சட்டத்தரணி போன்று வேடம் அணிந்த ஒருவர் சஞ்சீவவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருந்தார்.
படுகொலை சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
எதற்காக நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த படுகொலை சம்பவத்துடன் சிறைச்சாலை திணைக்கள பணியாளர்களுக்கு தொடர்பு உண்டா என அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த அமைப்பின் சேனக பெரேரா இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டு வரும் நிலையில் எதற்காக அவரை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்த வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதி உச்ச பாதுகாப்பு
இதேவேளை சஞ்சீவ என்பவருக்கு அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகிய தரப்புகள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலைக்குள் எவருக்கும் ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த சந்தேக நபர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்த படுகொலையுடன் சிறைச்சாலை திணைக்கள பணியாளர்களுக்கு எவ்வாறான தொடர்பு உண்டு என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
