அனுர குமாரவின் தீர்மானம் கவலைக்குரியது! ஜனாதிபதி
சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றுவதில்லை என்ற அனுர குமாரவின் தீர்மானம் கவலைக்குரியது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு ஜே.வி.பிக்கு நேற்று நேரம் வழங்கப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த கலந்துரையாடலில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், சர்வகட்சி அரசாங்கத்தில் எந்த வகையிலும் இணைந்து கொள்ளப் போவதில்லை என்றும் ஜே.வி.பி. நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் நேற்று மாலை ஜனாதிபதி தரப்பில் இருந்து அனுர குமார திசாநாயக்கவுக்கு பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுர குமாரவின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி கவலை
அதில், கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என்ற ஜே.வி.பியின் தலைவர் அனுர குமாரவின் தீர்மானம் குறித்து கவலையடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜே.வி.பி. தனது ஒத்துழைப்பை வழங்கும் என்று தான் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் நிர்வாக கட்டமைப்பு அமைக்கப்படும் - ஜனாதிபதி |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri