ஜனாதிபதியைச் சந்திக்க ஜே.வி.பி மறுப்பு
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று(09) மாலை இடம்பெறவிருந்தது.
எனினும், ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க கட்சி தீர்மானித்துள்ளது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை
முன்னதாக ஜனாதிபதியுடனான பேச்சில் கலந்துகொள்ளும் போதிலும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சி ஆதரவளிக்காது என்று ஜே.வி.பி. தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
