அரச இல்லம் குறித்து அநுர வழங்கிய உத்தரவு: நாமல் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இல்லத்திலிருந்து எந்த நேரத்திலும் வெளியேற தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எழுத்துப்பூர்வமான அறிவிப்பு
தனது தந்தை தற்போது வசித்து வரும் வீடு அவரது தனிப்பட்ட சொத்து அல்ல, ஆனால் அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்றும், அரசியலமைப்பின் படி முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சலுகையாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நாமல் ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே, குறித்த வீட்டை விட்டு வெளியேறுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை உறுதிசெய்து, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார, மகிந்த ராஜபக்சவிற்கு இந்த விடயம் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்கலாம் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைப்பது மற்றும் அது சார்ந்த தொடர்ச்சியான விவாதங்களுக்கு மத்தியில் நாமல் ராஜபக்ச தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |