ராஜபக்சர்களின் கைதுகள் அநுரவின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்களா..!
ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராத ஒரு பெரும்பான்மையை பெற்று, ஆட்சியை கைப்பற்றிய அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தனது அரசாங்கத்தில் ஊழல் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, முந்தைய அரசாங்கங்களின் ஊழல் குற்றங்களை கண்டறிந்து, அவற்றுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், அநுரவின், அரசியல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒரு அரசியல் பழிவாங்கலை சார்ந்ததே தவிர மக்களுக்கான நடவடிக்கையோ நாட்டுக்கான நகர்வோ கிடையாது என பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மறுபக்கம், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்காத தரப்புகளிலும் இருந்தும் கூட அவரின் நடவடிக்கைகளுக்கு சாதகமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.
எனவே, இது தொடர்பில், இந்த ஆட்சியை தெரிவு செய்த மக்களின் மனப்பாங்கு எவ்வகையில் இருக்கின்றது என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri