மோடியின் யோசனையை பரிசீலிக்க மறுத்து விட்ட அநுர
இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில கருத்துக்களை தெரிவித்த போதிலும், தற்போதைய நிலையில், இந்தியாவுடன்(India) நில இணைப்புத் திட்டத்தைப் பரிசீலிக்க இலங்கை மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2002-2004 ஆம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் போது, இரு நாடுகளையும் இணைக்கும் நிலப் பாலம் குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் நம்பிக்கையின் நாயகர்கள் என்று அறிவிக்கப்படவுள்ளனர்...!
புதுடில்லிக்கு விஜயம்
இதனையடுத்து, 2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது, கூட்டு அறிக்கையில் நில இணைப்பும் குறிப்பிடப்பட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பரில் புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போதைய சூழ்நிலையில், இந்தத் திட்டத்தை முன்னெடுக்க மறுத்துவிட்டார் என்று தெரியவருகிறது.
இதன் காரணமாக, இந்தியப் பிரதமரின் அண்மைய வருகையின் போதும், இந்த விடயம் இலங்கையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கியிருக்கவில்லை.
ராமர் சேது பாலம்
இருப்பினும், ஒரு சந்தர்ப்பத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, பிரதமர் மோடி இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நில இணைப்பு பற்றி குறிப்பிட்டார்.
அத்துடன் தமது பயணத்தை நிறைவு செய்த பின்னரும், அவர் இந்திய விமானப்படை உலங்கு வானூர்தியில் இலங்கையிலிருந்து புறப்பட்டபோது, இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராமர் சேது பாலத்தை அவர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
