நாட்டைப் பாதாளக் குழுக்களிடம் அடகு வைக்கும் அநுர - மொட்டுக் கட்சி சாடல்
இலங்கையைப் பாதாள உலகக் குழுக்களின் கூடாரமாக மாற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(16.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்
மேலும் தெரிவிக்கையில், "1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. ஏற்படுத்திய கிளர்ச்சிகள் மற்றும் 30 வருட கால எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தத்தின் போது கூட ஏற்படாத ஒரு பாரிய அச்சம் இன்று பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 111 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் 60 மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 47 நாட்களில் மாத்திரம் 9 கொலைகளும் 9 துப்பாக்கிச்சூடுகளும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டமை அரசின் இயலாமையையே காட்டுகின்றது.
இந்த வன்முறைகளின் பின்னணியில் அரசு இருப்பதாகவே மக்கள் சந்தேகிக்கின்றனர். தேர்தல்கள் மூலம் மீண்டும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள தற்போதைய திசைகாட்டி அரசு, பாதாள உலகக் குழுக்களின் உதவியுடன் அதிகாரத்தைத் தக்கவைக்க முயற்சிக்கின்றது.
அத்துடன், கடந்த கால யுத்தம் என்பது அரசியல் தேவைகளுக்காகவே நடத்தப்பட்டது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்த கருத்தானது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினருக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பாகும். இதற்காகப் பிரதமர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri