அநுரவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்! அம்பலப்படுத்தும் நாமல்
நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆசிரியர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பாடசாலையின் அதிபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர்கள் அவர்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என நாமல் குற்றம் சுமத்தியுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு
கடந்த காலங்களில் ஒவ்வொரு போதைப்பொருள் வழக்கிலும் ராஜபக்சர்கள் மீது குற்றம் சாட்டிய அரசாங்கம், இந்த முறை யாரை போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த முறை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் தடுத்து நிறுத்தி, அவர்களுக்குப் பின்னால் உள்ள அரசியல்வாதிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் போதைப்பொருள் விற்பனையை நிறுத்திவிட்டு வரவு செலவு திட்டங்களை செயல்படுத்த வேண்டும், இல்லை என்றால் மீண்டும் நூற்றுக்கு மூன்று சதவீதமாக வாக்கு குறைவதனை தடுக்க முடியாமல் போய்விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.