தனது பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டவில்லை: பிரசார திட்டத்துடன் அனுரகுமார
தனது பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கும் எவருக்கும் உரிமை உண்டு எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(13) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வேட்பாளரின் உயிருக்கு ஆபத்து என்ற கருத்து பொது மக்களிடையே ஏற்படுத்தப்பட்டால், அத்தகைய அரசியல் சூழலை தோற்கடிக்க வேண்டும்.
குறிப்பிட்ட வேட்பாளரின் பாதுகாப்பு குறித்து யாரும் கேள்வி எழுப்பினால், அது ஜனநாயகம் அல்ல, தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் கொலை செய்யப்படுவார் என்ற கருத்தை சமூகம் உருவாக்கினால், அத்தகைய அரசியல் சூழல் தோற்கடிக்கப்படவேண்டும்.
இந்தநிலையில், தோற்கடிக்கப்பட்ட எவருக்கும் தேர்தலில் போட்டியிடவும், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவும் உரிமை உண்டு, எனவே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுவதைப் பற்றி தாம் கவலைப்படவில்லை.
எனது கட்சி இந்த முறை வலுவான மற்றும் வெற்றிகரமான தேர்தல் பிரசாரத்தை திட்டமிட்டுள்ளது, ஏற்கனவே நாட்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களை இந்த பிரசாரம் உள்ளடக்கியுள்ளது.
அத்துடன், எனது பிரசாரம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வதற்கு திட்டமிடபட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 15 ஆம் திகதி வீடு வீடாக பிரசாரம் செய்யும் திட்டத்தை தொடங்கவுள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |