அநுரவுக்கு உயிர் அச்சுறுத்தல் - குண்டு துளைக்காத வாகனத்தில் பயணிப்பதாக தகவல்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க பயன்படுத்திய வாகனம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற பாதுகாப்பு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத வாகனம்
இந்த நாட்களில் அவர் அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு குண்டு துளைக்காத வாகனத்தையே பயன்படுத்தவதாக தெரியவந்துள்ளது.
எனினும் கொடுக்கப்பட்ட வாகனத்திற்கான எரிபொருள் செலவினை யார் ஏற்பது என்பது தொடர்பில் பல தரப்பினரால் கருத்து வெளியிடப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆனாலும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் போது அரச வாகனங்களுக்கு தேசிய மக்கள் கட்சியின் பணத்தின் மூலம் எரிபொருள் நிரம்புவதாகவும், மக்களின் வரிப்பணம் இதற்காக பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
