மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு
தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகின்றார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பதில் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்(M.A.Sumanthiran) குற்றஞ்சாட்டினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் 60 வருட நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை கொழும்பு - விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார்.
நிறைவேற்று அதிகாரம்..
இந்த உரை குறித்து தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பதில் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன்,
“தங்களிடம் முன்றிலிரண்டு பெரும்பான்மை இருப்பதாகவும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகின்றார்.
தங்களிடம் 2/3 பெரும்பான்மை இருப்பதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம்(!) உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகிறார். “அதிகாரம் கெடுவிக்கும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும்.” யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை என்று சொல்லும்போது அவரது கணிதத் தகைமை வெளிப்படுகிறது!! https://t.co/qTdbMod9Oy
— M A Sumanthiran (@MASumanthiran) May 15, 2025
அதிகாரம் கெடுவிக்கும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும். யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை என்று சொல்லும்போது அவரது கணிதத் தகைமை வெளிப்படுகின்றது" என தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam