அதிகாரத்தைக் கைப்பற்றியதைவிட எதிர்காலத்தில் பாரிய நெருக்கடி எமக்குள்ளது;அமைச்சர் லால் காந்த பகிரங்கம்...
அதிகாரத்தைப் பெறுவதற்கு பாடுபட்டதைவிட எதிர்காலத்தில் மேலும் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளதாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
எதிர்கால சாவால்கள்
நிறைவேற்று அதிகாரமும் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கப்பட்டதாக அடிக்கடி கூறப்படுகிறது. நிறைவேற்று அதிகாரத்தைப் பற்றிப் பேசும்போது, நாமே போராடி அந்த அதிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவை ஆணைக்குழுக்களுக்கு வழங்கினோம் என்பதை மறந்து விடுகிறோம்.
நிறைவேற்று ஜனாதிபதியால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். 13வது திருத்தம், 17வது திருத்தம் மற்றும் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
மேலும் சில நியமனங்கள் மற்றும் நீக்கங்களை நிறைவேற்று அதிகாரத்தால் செய்ய முடியாது என்பதை நாங்கள் மறந்து விடுகிறோம்.

பொது சேவையில் ஆட்சேர்ப்பு, இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன. பல உயர் பதவிகளுக்கான நியமனங்கள் அரசியலமைப்பு சபையால் செய்யப்படுகின்றன.
159 பேரை பயன்படுத்தி அந்த அதிகாரங்களை மீண்டும் பெற முடியாதா என்று சிலர் கேட்கிறார்கள். அவ்வாறு செய்தால், ஜனநாயகம் ஒழிக்கப்படும்.அதனால் எதிர்காலத்தில் எமக்கு பாரிய கஷ்டங்கள் காத்திருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri