அதிகாலையில் விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து! பலரின் உயிரை காப்பாற்றிய சாரதி
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியில் இன்று (26) அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சாரதி மற்றும் நடத்துனரின் செயற்பாடு
திடீரென பேருந்தின் தடைகளின் (Brake) கட்டுப்பாட்டை இழந்து, சாரதி ஒரு மலையில் மோதியதாகவும், பின்னர் பேருந்தை நிறுத்தியதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதி பேருந்து வளைவில் செல்ல முயன்றபோது, பேருந்தை கட்டுப்படுத்த இரண்டாவது "கியர்" (Gear) மாற்றியதாகவும், அந்த நேரத்தில், பேருந்தின் தடை ( பிரேக்) செயலிழந்ததால், பிரேக்குகளைப் பயன்படுத்தி ஒரு சாய்வான பகுதியில் உள்ள மலையில் ஏறி பேருந்தை நிறுத்தியதாகவும் சாரதி கூறியுள்ளார்.
இந்த விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 80 பயணிகள் இருந்துள்ளதுடன்,மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேஷ் சுதர்சன் (49) என்பவர் உடனடியாக செயற்பட்டு 40 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் அந்த பயணிகளை வேறு பேருந்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஏற்பட்ட மரணம்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam