ஜனாதிபதி அநுர குமாரவுக்கு மேலும் ஒரு சிக்கல்:பிவித்துரு ஹெல உறுமய சிஐடியில் முறைப்பாடு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை The International Covenant on Civil and Political Rights (ICCPR) Act, சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் குமார ராஜரத்தன குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த (16.01.2026) ஜனாதிபதி ஆற்றிய உரை நாட்டின் ஒற்றுமைக்கும் சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் அது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இன்று (19.01.2026) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அது தொடர்பில் குமார ராஜரத்தன மேலும் கூறியதாவது,
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை
பௌத்த மக்கள் போயா தினத்தில் அநுராதபுரத்தைக் கடந்து யாழ்ப்பாணத்திலுள்ள விகாரைக்கு வந்து வைராக்கியத்தை விதைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக தமது மத அனுஷ்டானங்களை செய்து தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியவர்கள் இன்று அரசாங்கத்திடம் கேட்டா மதஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறான பிரசாரங்களால் தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான குரோதத்தை விதைப்பதாக உள்ளது.தனக்கு விரும்பிய மதத்தை பின்பற்ற மக்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை ஜனாதிபதி தனது அதிகாரத்தை கொண்டு கட்டுப்படுத்த முயற்சிக்கிறாரா? என்ற வினாவை கேட்கிறேன்.
ஆனால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் வரப்பிரசாதங்களால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாததால் அவரின் பதவிக் காலம் முடிந்தவுடன் சட்டத்தின் முன் அவர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம் என குறிப்பிட்டிருந்தார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam